மாஸ்கோ:ரஷ்ய விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்துமுர் மாஸ்கான் என்ற இடத்திற்கு சூப்பர் ஜெட் விமானம் புறப்பட்டது. விமான சிப்பந்திகள் உட்பட 78 பயணிகள் சென்ற விமானம் புறப்பட்ட சிறுது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக விமானநிலையத்துடன் தொடர்பு கொண்டு மீண்டும் தரையிறங்க முற்பட்டது. விமானம் தரையிறங்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 35 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இச்சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியானார்கள். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் பலியான குடும்பத்தினர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கலை தெரிவித்துள்ளார்.