காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியிலும் ,சோனியா காந்தி ரேபர்லி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர் .காங்கிரஸ் உ .பி யில் சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது .பகுஜன்சமாஜன் மற்றும் சமாஜவாதி கூட்டணியாக போட்டியிடுகிறது .இருந்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியா வை எதிர்த்து வேட்ப்பாளர்களை நிறுத்தவில்லை .இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அமேதி மற்றும் ரேபர்லி தொகுதியில் பாஜக வை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் .இதனால் பாஜகவின் ராகுலை வீழ்த்த வேண்டும் என்ற முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது .