சென்னை, : தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்டசபை தொகுதிக்கும், வரும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 845 வேட்பாளர்களும், சட்டசபை தொகுதிகளில், 242 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம், 269 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும், 5.99 கோடி வாக்காளர்கள், தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.

கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், ஒரு மாதமாக, தொகுதி முழுவதும், பிரசாரம் செய்து வருகின்றனர். , தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை (ஏப். 16) மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் நிறைவடைகிறது.