Select Page

City Union Bank



Share this page

ஜெனீவா: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாக்.கில் செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து நெருக்கடி கொடுக்க இந்தியா முயற்சித்து வருகிறது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. இது தொடர்பாக மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டது.

இந்நிலையில் மீண்டும் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடந்தது. இதில் இந்தியா எடுக்கும் முயற்சிக்கு நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.


Share this page