புதுடில்லி: அபுதாபி பட்டத்து இளவரசர், மொகமத் பின் ஜாயத் அல் நாயான், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அபுதாபி சென்ற பிரதமர் மோடியை, அபுதாபியின் பட்டத்து இளவரசர், மொகமத் பின் ஜாயத் அல் நாயான் வரவேற்றார். அப்போது இரு தரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இரு தரப்பு அதிகாரப்பூர்வமான பேச்சு நடந்தது. ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

இந்நிலையில் இன்று மொகமத் பின் ஜாயத் அல் நாயான், தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடியுடன் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலின் போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஓத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்றது , இந்தியா- பாக். விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.