புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பிரியங்கா போட்டியில்லை என காங். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சோனியாவின் மகள் பிரியங்கா கடந்த ஜனவரி மாதம் உ.பி. மாநில காங். பொதுச் செயலாளராகவும், கிழக்கு உ.பி. தேர்தல் பொறுப்பாளராகவும் காங். தலைவர் ராகுலால் நியமிக்கப்பட்டார்.

இவரது அரசியல் பிரவேசம் தேசிய அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் பிரியங்கா போட்டியிடப்போவதில்லை எனவும் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடமாட்டார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ராகுல், (அமேதி) சோனியா ( ரேபரேலி ) ஆகிய இருவரும் போட்டியிட இருப்பதால் பிரியங்கா போட்டியிடுவது சந்தேகம் தான் எனவும் கூறப்படுகிறது.முன்னாக மூத்த தலைவர் மன்மோகன்சிங் போட்டியிட விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.