ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, படேல் சமுதாய தலைவர் ஹர்திக் படேல், காங்கிரசில்இன்று ஐக்கியமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.குஜராத்தில், அதிகமாக வசிக்கும் படேல் சமுதாயத்தினருக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஹர்திக் படேல் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்.

நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பும், ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும், ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று (மார்ச்12), ஆமதாபாதில் நடக்கவுள்ள, காங்., கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல், பிரியங்கா முன்னிலையில், காங். கட்சியில் ஹர்திக் படலே் இணைய உள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.