மதுரை : பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா இன்று (பிப்., 22) மதுரை வருகிறார்.

பெங்களூருவிலிருந்து தனி விமானம் மூலம் காலை 10:15 மணிக்கு வருகிறார். பின் அவர் மதுரை அருப்புக்கோட்டை ரோடு சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி வளாகத்தில் காலை 10:25 முதல் 11:30 மணி வரை நடக்கும் பா.ஜ., லோக்சபா தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின் ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் மாவட்டம் பட்டனம்காத்தானுக்கு பகல் 12:30 மணிக்கு செல்கிறார். அங்கு பகல் 12:40 முதல் 1:40 மணி வரை நடக்கும் ராமநாதபுரம் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பகல் 1:45 மணிக்கு புறப்பட்டு பகல் 3:40 மணிக்கு பாலக்காடு செல்கிறார்.

மதுரையில் கூட்டம் நடக்குமிடத்தை பா.ஜ., மாநில செயலர் ஸ்ரீநிவாசன், மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டமும் நடந்தது. கலெக்டர் நடராஜன், விமான நிலைய இயக்குனர் ராவ், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமான்டர் மொஹந்தி, எஸ்.பி., மணிவண்ணன், புலனாய்வு பிரிவினர் பங்கேற்றனர்.