Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: துணை ராணுவ வீரர்கள், காஷ்மீருக்கு விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள், சென்ற வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு: டில்லி – ஸ்ரீநகர், ஸ்ரீநகர் – டில்லி, ஸ்ரீநகர் – ஜம்மு செக்டார் பகுதிகளில், துணை ராணுவ வீரர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

காவலர், தலைமை காவலர் மற்றும் துணை காவலர் உள்ளிட்ட பதவிகளை சேர்ந்த 7,80,000 வீரர்கள் இந்த உத்தரவால் பயன்பெறுவர். பணியின் போதும், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் போதும், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் போதும் விமானத்தில் பயணம் செய்யலாம். இதன் மூலம், வீரர்களின் பயண நேரம் வெகுவாக குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Share this page