Select Page

City Union Bank



Share this page

லக்னோ: காங்கிரஸ் கட்சியில், உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்திய பொதுச் செயலராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக வரும் பிரியங்காவுக்கு, பலத்த வரவேற்பு அளிக்க, உ.பி., மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் மகளும், காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியுமான, பிரியங்கா, 47, கட்சியின், உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பிராந்தியத்தின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில், அவர், அந்தப் பொறுப்பை ஏற்றார். கட்சிப் பொறுப்பை ஏற்ற பின், உத்தர பிரதேச மாநிலத்துக்கு, அவர் முதல் முறையாக இன்று வர உள்ளார்.

 

தாக்கம் :

காங்கிரஸ் தலைவர் ராகுல், உ.பி.,யின் மேற்கு பிராந்திய பொதுச் செயலர், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரும், அவருடன் இன்று வர உள்ளனர்.விமான நிலையத்தில் இருந்து, கட்சியின் மாநில தலைமை அலுவலகம் வரை, அவர்களை பேரணியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர், அன்ஷு அவஸ்தி கூறியதாவது: கட்சிப் பொறுப்பை, பிரியங்கா ஏற்று உள்ளது, தொண்டர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைவில், லோக் சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில், பிரியங்காவின் வருகை, கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை அளித்து உள்ளது. லக்னோவுக்கு வரும், ராகுல், பிரியங்கா, ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ஆலோசனை :

விமான நிலையத்தில் இருந்து, கட்சி அலுவலகத்துக்கு, லக்னோவின் முக்கிய சாலைகள் வழியாக, அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்படுவர். நகரின், 37 இடங்களில், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், அவர்களுக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வரும், 14ம் தேதி வரை, உ.பி.,யில் இருக்கும் பிரியங்கா, கிழக்கு பிராந்தியத்தில் உள்ள, 42 , சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Share this page