புதுடில்லி: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கட்சி அமைச்சர்கள் , எம்.எல்.ஏக்கள் , எம்.பி.,க்கள் எம்.எல்சி உறுப்பினர்களுடன் இன்று உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.
உண்ணாவிரத போராட்டம்
முன்னதாக காந்தி நினைவிடமான ராஜ்கோட் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஆந்திரபவனில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் தர்ம போராட்ட தீக்ஷா ( நீதிக்கான நீண்ட போராட்டம்) என்ற பெயரில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். மறுநாள் 12 ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்த மனு ஒன்றை அளிக்க உள்ளார்.

எதிர்பார்ப்பு
சந்திரபாபு நாயுடுவின் கருத்துக்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இன்றைய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013 ல் போராட்டம்
முன்னதாக சந்திரபாபு நாயுடு கடந்த 2013-ம் ஆண்டில் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினார். 5 நாள் போராட்டத்தின் போது உடல் நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.