புதுடில்லி: ”வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும்,” என, பா.ஜ., மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: வாங்கும் திறன் அடிப்படையில், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து, இந்தியா திகழ்கிறது. முன்னாள் பிரதமர், நரசிம்மராவ், சொத்துக்கள் மீது அரசுக்கு உள்ள உரிமையில் மாற்றம் ஏற்படுத்தினார். தைரியத்துடன் அவர் எடுத்த முடிவால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 7 – 8 சதவீதமாக உயர்ந்தது. இருப்பினும், இது போதாது. இந்த விகிதத்தை, 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும்.

தற்போது அளிக்கப்பட்டு வரும், வரி குறைப்பு, இலவசங்கள் போதுமானதாக இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க, வருமான வரி முறையை, முற்றிலும் ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.