சென்னை : ”பிரதமர் நரேந்திரமோடி, பிப்., 10ல், திருப்பூர் வருகிறார்,” என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில், அவர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திரமோடி, பிப்., 10ல், திருப்பூர்; 19ல், கன்னியாகுமரிக்கு வருகிறார். இரண்டு நிகழ்ச்சிகளுக்கு பின், தமிழக அரசியல் சூழ்நிலை, ஒட்டுமொத்தமாக மாறும். ஏழு கோடி தமிழக மக்களின் மனதிலும், மாற்றம் ஏற்படும்.

மத்திய அரசில், தி.மு.க., பங்கு வகித்தபோது, தமிழகத்திற்கு, ஒரு திட்டம் கூட வரவில்லை. தமிழகத்திற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் செய்த துரோகத்திற்கு, தி.மு.க., மன்னிப்பு கேட்க வேண்டும். கிராம மக்களை, தி.மு.க.,வினர் சந்திப்பது, ஏமாற்று வேலை. மத்திய அரசின் பட்ஜெட், நாட்டு மக்களுக்கு, நன்மை தருவதாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.