Select Page

City Union Bank



Share this page

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் கலாசாரத்திற்கு எதிராக கேரள இடதுசாரி அரசு செயல்படுகிறது என திருச்சூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

 

என்னை பழியுங்கள்


கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சியே எங்களின் நோக்கம். ஆனால், எதிர்கட்சியினர் மோடி , மோடி என என்மீதே குற்றம்சாட்டியும், என்மீது அவதூறு பரப்பியும் வருகிறது. என்னை அவமதியுங்கள் ஆனால் விவசாயிகளையும், இளைஞர்களையும் அவமானப்படுத்த வேண்டாம். என்னை எதிர்க்கவே எதிர்கட்சிகள் ஒன்றுகூடியுள்ளது. அவர்களுக்கு ஒரு நோக்கமும் இல்லை.

 

விஞ்ஞானி மீது வழக்கு


பெண்கள் குறித்து காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் கவலைப்படுவதில்லை. கேரள அரசு கலாசாரம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உணர்வுப்பூர்வமான நம்பிக்கை விஷயத்தில் கேரள அரசு அவமரியாதை செய்கிறது. சபரிமலை விவகாரம் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. காங்கிரசும், இடதுசாரிகளும் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது. இந்த கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசுவது நகைப்புக்குரியது. நாட்டின் விஞ்ஞானியான நம்பிநாராயணன் மீது கிரிமினல் குற்றம்சாட்டியது காங்.,. ஆனால் நாங்கள் அவருக்கு விருது வழங்கியுள்ளோம். தேச நலனுக்கு எதிராக காங்., செயல்படுகிறது.

 

கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டேன்


நாட்டின் கலாசாரத்தை காத்திடவே நான் உழைக்கிறேன். நாட்டு சொத்துக்களை யாரையும் கொள்ளை அடிக்க அனுமதிக்க மாட்டேன். ஊழல் செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர். இவ்வாறு மோடி பேசினார்.

 

சுறு, சுறு மோடி


பிரதமர் மோடி இன்று காலை முதல் தமிழகம் மற்றும் கேரளா என 4 இடங்களில் பங்கேற்று பேசினார். அனைத்து கூட்டங்களும் மிக குறைந்த நேரத்தில் முடிக்கப்பட்டன. மதுரையில் அரசுவிழா அடுத்த 5 நிமிடத்தில் பொதுக்கூட்டம் , தொடர்ந்து அவர் கொச்சி புறப்பட்டு சென்றார். அங்கு நடந்த கூட்டம் முடிந்ததும் திருச்சூர் சென்றார். இங்கும் அரசுவிழா மற்றும் பொதுக்கூட்டம் என பங்கேற்றார்.


Share this page