Select Page

City Union Bank



Share this page

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் மக்களின் ஒத்துழைப்பால் தீவிரவாதம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டம் வன்முறை இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுசுதந்திரம் அடைந்த நாள் முதல் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டதுடன் மாநிலத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் துப்பாக்கி சத்தங்களுடன் மக்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டு மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டது. பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் ராணுவத்தினர் போலீசார்இணைந்து செயலாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாநிலத்தில் உள்ள பாராமுல்லா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமை மூன்று பயங்கரவாதிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் வன்முறை இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில் பாராமுல்லா மாவட்ட மக்களின் ஒத்துழைப்பு இருந்ததால் சிறப்பான பாதுகாப்பும், இங்கு வன்முறை , பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என்றார்.


Share this page