Select Page

City Union Bank



Share this page

ஸ்ரீநகர்: குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் இரண்டு இடங்களில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு – காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. நாட்டின் குடியரசு தின விழாவுக்கு, இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில், பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீநகரில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் அருகே, பயங்கரவாதிகள் நேற்று வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து, தாக்குதல் நடத்தினர். இதில், அந்த பகுதியில் இருந்த சில கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்தன.

ஷோபியான் மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல்களை அடுத்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Share this page