Advertisement

சென்னை: பாலகிருஷ்ணா ரெட்டியின், எம்.எல்.ஏ., பதவி பறிபோனதையடுத்து தமிழகத்தில் காலி தொகுதிகளின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்கள் மறைவு காரணமாக, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது காரணமாக, 18 தொகுதிகள் காலியாக உள்ளன. தற்போது, பாலகிருஷ்ணா ரெட்டியின், எம்.எல்.ஏ., பதவியும் பறிபோயுள்ளதால், அவரது ஓசூர் தொகுதி உட்பட, காலி தொகுதிகளின் எண்ணிக்கை, 21 ஆக உயர்ந்துள்ளது.