Select Page

City Union Bank



Share this page

திருவனந்தபுரம்,: கேரளாவில், உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதற்கு எதிர்ப்புதெரிவித்து, அரசியல் கட்சிகள், ஹிந்து அமைப்புகள், போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சமீபத்தில், மாநிலம் முழுவதும், அய்யப்ப ஜோதி ஏந்தும் போராட்டம் நடந்தது.’இதற்கு, கேரள மாநில அரசு தக்க பதிலடி கொடுக்கும்’ என, ஏற்கனவே, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.சமீபத்தில், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றக் கூட்டம் நடந்தது.

இதில், ‘அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெண்கள் சார்பில், மனித சங்கிலி போன்ற சுவர் அமைக்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு, கேரள மாநிலத்தின், வடக்கு பகுதியான, காசர்கோடு துவங்கி, தெற்கு பகுதியான, பாறசாலை வரை, 620 கி.மீ., தொலைவுக்கு, பெண்கள், தங்கள் கைகளை இணைத்து, சுவர் போன்று நின்றனர்.
அப்போது, பெண்கள் உறுதிமொழியையும் எடுத்தனர்.இந்த விழாவில், மாநில முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Share this page