போபால்: ம.பி.யில் காங். கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக கமல்நாத் உள்ளார். முந்தைய பா.ஜ. ஆட்சியில் முதல்வராக இருந்த சிவராஜ்சிங் சவுகான், ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் வந்தே மாதரம் என்ற பாடலை காட்டாயம் ஒலிக்க வேண்டும் என தலைமை செயலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்த முறையை தற்போதைய முதல்வர் கமல்நாத் ரத்து செய்து உத்தரவிட்டார். . இது குறித்து சிவராஜ்சிங் சவுகான் கூறியது, மரபை மாற்றியது துருதிருஷ்டவசமானது. மீண்டும் அந்த முறையை காங். அரசு கொண்டு வரவேண்டும் அப்படி கொண்டு வரவில்லையெனில் வரும் 6-ம் தேதி தலைமை செயலகம் முன்பாக நானே வந்தே மாதரம் பாடலை பாடுவேன் என்றார்.