Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி : பயணியரின் பயன்பாட்டுக்கு இலவச பொருட்கள், சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள், ரயில்களில் இலவசமாக விளம்பரங்கள் செய்யும் புதிய திட்டத்தை, ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் ரயில்களில், லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். ரயில்களில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களுக்கு, மக்களிடம் பெரியளவில் வரவேற்பு கிடைப்பது நிச்சயம். இதை மனதில் வைத்து, புதிய திட்டத்தை வகுத்து உள்ளோம்.

இதன்படி, ரயில்களில் பயணியருக்கு தேவைப்படும், சோப்பு, கை துடைக்கும் துணிகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இலவசமாக வழங்க வேண்டும். இதற்கு பதிலாக, அந்த நிறுவனங்களுக்கு, ரயில்களில் இலவசமாக விளம்பரம் செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த திட்டத்தில், பணப்பரிமாற்றம் எதுவும் இருக்காது. இந்த வாய்ப்பை பயன்படுத்த, பல நிறுவனங்கள் முன்வரும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர்பாக, ரயில்வேயின் அனைத்து பொது மேலாளர்களுக்கும், சமீபத்தில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம், சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Share this page