Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி : குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய, பொருளாதார விவகாரங்கள் மீதான, அமைச்சரவை குழு, ககன்யான் உட்பட, பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தது. இந்த கூட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு, மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் அளிக்க வகை செய்யும், ‘போக்சோ’ சட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை காக்க கொண்டு வரப்பட்ட போக்சோ சட்டத்தில், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனையாகவும் இருந்தது. தற்போது இதில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால், மரண தண்டனை வழங்க போக்சோவிலுள்ள 4,5,6 சட்ட பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.


Share this page