புதுடில்லி: 2019 தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்பட்சத்தில், சுப்ரமணியசாமிக்கு முக்கிய பதவிகள் வழங்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு
சுப்ரமணியசாமி பா.ஜ.,வில் இணைந்த பிறகு அவர் ராஜ்யசபாவில் நியமன எம்.பி.,யாக நியமிக்கப்பட்டார். ஆனால், சாமி தனக்கு நிதி அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். பா.ஜ., தலைவர்கள் சிலரின் எதிர்ப்பு காரணமாக எந்த அமைச்சர் பதவியும் கிடைக்கவில்லை.
அறிவுரை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஒருவர் மற்றும் பா.ஜ., தலைவர் அமித்ஷா ஆகியோர், சாமியிடம், மத்திய அரசை குறைகூறுவதை தவிர்க்கும்படி கூறினர். காங்கிரசுக்கு அதிக நெருக்கடி கொடுக்கவும், பா.ஜ., மீண்டும் ஆட்சியமைக்கும் போது, தூதரக ரீதியில் முக்கிய பதவி வழங்க மோடி திட்டமிட்டு உள்ளதாக அவரிடம் கூறியுள்ளனர்.