உதய்ப்பூர், ‘ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறன், எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு உள்ளது’ என, அந்நிறுவனத்தின் தலைவர் மாதவன் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து ௩௬ ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.’ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமீறல்கள் நடந்துள்ளன; போர் விமானங்களைத் தயாரிக்கும் உரிமம், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு வழங்காமல், ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது’ என, காங்., தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இதை மத்திய அரசு மறுத்து வருகிறது.இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில், எச்.ஏ.எல்., நிறுவன தலைவர் மாதவன் கூறியதாவது:
ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் திறன், எச்.ஏ.எல்.,லுக்கு உள்ளது. எனினும் ௩௬ ரபேல் விமானங்களை உடனே வாங்க, மத்திய அரசு முடிவு செய்ததால், அதை, இங்கு தயாரிப்பது பற்றிய கேள்வி தேவையில்லை, என்றார்.