Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி : யூகோ வங்கியின் மூலம், ஈரான் நாட்டின் 5 வங்கிகளில், ரூபாயை செலுத்தி, கச்சா எண்ணெய்யை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை உடைத்தெறியப்பட உள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால், அந்நாட்டிடம் இருந்து, டாலர்களை கொடுத்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இயலாது. இதனைத் தொடர்ந்து, ரூபாயை செலுத்தி, கச்சா எண்ணெய்யை பெற முடிவு செய்த இந்தியா, இதற்காக ஈரானோடு ஒப்பந்தம் செய்தது. இதன் அடிப்படையில், ஈரானிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை, யூகோ வங்கியின் மூலம், ஈரானில் உள்ள 5 வங்கிகளில் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு செலுத்தப்படும் ரூபாயை கொண்டு, ஈரான் தனக்கு தேவையான, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ள இருநாடுகளிடையேயான ஒப்பந்தம் வழிவகை செய்திருக்கிறது.


Share this page