புதுடில்லி: பார்லி. வளாக மைய அரங்கில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முழுஉருவ படம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பார்லி.வளாக மைய அரங்கில் காந்தி, தாகூர், இந்திரா, லால்பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் முழு உருவப்படங்கள் உள்ளன. இவர்களின் பிறந்த நாள், மற்றும் நினைவு நாளின் போது பிரதமர், ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் என கட்சி பேதமின்றி ஒன்று கூடி மலரஞ்சலி செலுத்துவது மரபு.
இந்நிலையில் முன்னாள் பிரதமரும் பாரத ரத்னா விருது பெற்ற பா.ஜ.மூத்த தலைவருமான வாஜ்பாய் முழு உருவ படம் வைப்பது தொடர்பாக பார்லி. முழுஉருவபட கமிட்டி கூட்டம் அதன் தலைவரும் லோகசபா சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர்கள் தம்பிதுரை, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாஜ்பாய் முழு உருவபடம் வைக்க முடிவு செய்யப்பட்டது.