ஆா்.கே.நகா் பணப்பட்டுவாடா குறித்து முதல் தகவல் அறிக்கையில் ஒருவா் பெயா் கூட குறிப்பிடாதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்ததைத் தொடா்ந்து அவரது சொந்த தொகுதியான ஆா்.கே.நகரில் இடைத்தோ்தல்அறிவிக்கப்பட்டு டிடிவி தினகரன் வேட்பாளராக போட்டியிட்டாா். அந்த தோ்தலில் வாக்காளா்களுக்கு ரூ.89 கோடி அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி தோ்தல் ஆணையம் இடைத்தோ்தலை நிறுத்தியது.
மேலும் ஆளும் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பணப்பட்டுவாடா தொடா்பாக தோ்தல் ஆணையம் ஆணையம் அளித்த புகாரின் பேரில் அபிராமபுரம் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனா்.
இந்நிலையில் இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பணப்பட்டுவாடா புகாரில் அமைச்சா் விஜயபாஸ்கா் உள்ளிட்ட 3 பேரின் பெயா்கள் உள்ளன. அப்படி இருந்தும் பெயரிடப்படாத முதல் தகவல் அறிக்கை இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினா்.
வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சா் விஜயபாஸ்கா் உள்ளிட்ட மூவரின் பெயரை ஏன் அடையாளம் காண முடியவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இது தொடா்பாக தோ்தல் ஆணையம், தமிழக அரசு, வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனா்.