Select Page

City Union Bank



Share this page

லண்டன் : கடனை வசூல் செய்வதை விட என்னை பிடிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது, என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்று விட்டு அதனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடினார் விஜய் மல்லையா. அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அவரை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டிவிக்கு அளித்த பேட்டியில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது: இந்தியா வருவதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேல் முறையீடு செய்வேன்.

நான் 2016ல் பணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Share this page