Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: பரபரப்பான அரசியில் சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று பா.ஜ. எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்து பா.ஜ. மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. தெலுங்கானாவிலும் மிசோரமிலும் படுதோல்வி அடைந்துள்ளது.. இத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வுக்கு பெரிய பின்னடைவாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பா.ஜ. எம்.பி.க்கள் கூட்டம் இன்று ( டிச.13) புதுடில்லியில் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடக்கிறது.

Advertisement

Share this page