தானே: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயை, மர்ம நபர் ஒருவர்,கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இணை அமைச்சரும், இந்திய குடியரசு கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே, மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசி விட்டு மேடையில் இருந்து இறங்கிய போது, மர்ம நபர் ஒருவர், அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயே தாக்கினார். கன்னத்தில் அறைந்ததாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள், அந்த மர்ம நபரை கடுமையாக அடித்து உதைத்தனர். இதனை தொடர்ந்து அமைச்சரின் பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் , மர்ம நபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
மர்ம நபர் ஏன் தாக்குதல் நடத்தினார் என்ற விவரம் தெரியவில்லை. இருப்பினும், தாக்குதல் நடத்திய நபர், அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சி கூட்டணியை சேர்ந்தவர் எனத்தெரிகிறது.