புதுடில்லி: பாலியல் முதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், குழந்தைகளுக்கு, ‘ஹார்மோன்’ ஊசிகளை போட்டு, பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘போக்சோ’ சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.தண்டனைநாட்டின் பல்வேறு பகுதிகளில், பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர மாக கொலை செய்யப்பட்டனர்.இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் எனப்படும், போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் முதிர்ச்சியை ஏற்படுத்தி, ஹார்மோன் ஊசி போடுவோருக்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கும் வகையில், அந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது.இதன் கீழ், சமூக வலைதளங்களில், குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவோருக்கும் தண்டனை வழங்கப்படும்.ஒப்புதல்இதற்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான மேனகா, அனுமதி அளித்ததையடுத்து, அது தொடர்பான பரிந்துரை, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பார்லி., குளிர்கால தொடரில், இந்த திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என, தெரிகிறது.