ஐதராபாத்: தேர்தல் வந்தவுடன் தான் ராகுல் தன்னை ஒரு சிவபக்தனாக காட்டி கொள்கிறார் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறினார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தலையொட்டி ஐதராபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஸ்மிருதி இராணி பேசியது, காங். கட்சியையும், அதன் தலைவர் ராகுலையும் பார்த்து கேட்கிறேன். மதத்தின பெயரால் இன்னும் எத்தன நாட்களுக்கு மக்களை பிரித்தாளும் முயற்சியை செய்வீர்கள். தேர்தல் என்று ஒன்று வந்ததால் ராகுல் தன்னை சிவபக்தனாக காட்டிக்கொண்டு கோயில்களை வலம் வருகிறார் என்றார்.
நிஜாமாபாத் நகரில்நடந்த பிரசாரத்தில் ஸ்மிருதி பேசியது, தெலுங்கானாவில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் பத்தாம் வகுப்புமுதல் பிளஸ்டூவரை மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். இம்மாநிலத்திற்கு மத்திய அரசு 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.