Select Page

City Union Bank



Share this page

கொழும்பு: இலங்கை பிரதமராக ராஜபக்சே செயல்பட அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே மீது அதிருப்தி அடைந்த இலங்கை அதிபர் சிறிசேனா, திடீர் நடவடிக்கை எடுத்து ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால், இலங்கை பார்லிமென்ட்டில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். இருந்தாலும், அந்நாட்டில் அரசியல் குழப்பம் தீர்ந்தபாடில்லை.

அந்நாட்டு எம்.பி.,க்கள் 122 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ராஜபக்சே பிரதமராக செயல்படவும், அமைச்சரவை கூட்டம் நடத்தவும் இடைக்கால தடை விதித்தது. ராஜபக்சேவும், அவரால் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களும், டிச., 12ம் தேதி ஆஜராகவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


Share this page