Select Page

City Union Bank



Share this page

ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை வரும் டிச 7ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க தலைவர்களை சந்தித்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஐதராபாத் மாநிலம் அல்காபூரில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்தார்.
பின்னர் அல்காபூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய அரசியலில் தாம் நுழைந்தாலும் கூட, தெலுங்கானா மாநில அரசியலில் ஈடுபடப் போவதில்லை .எனக்கு பதவி ஆசை இல்ல. ஆசைப்படும் நபரும் இல்லை. பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணமும் தமக்கு இல்லை இருப்பினும், தற்போது ஆபத்தான நிலையில் இருக்கும் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் . இதற்காகனே மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறேன் என்றார்.


Share this page