Select Page

City Union Bank



Share this page

கோல்கட்டா: பழங்குடியின மக்களின் மீதான தாக்குதலை தடுக்கும் விதமாக எதிர்காலத்தில் அண்டை மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்டை மாநிலங்களுடன் நல்ல உறவுகளை நாங்கள் விரும்புகிறோம். வன்முறையை தூண்டி, தேசத்தை பிளவு படுத்தும் முயற்சியாக மக்கள் மீதான தாக்குதலில் தேசிய கட்சிகள் ஈடுபட்டால் அவர்களுக்காக நாங்கள் போராடுவோம்.

அசாம் மாநிலத்தில் இருந்து வங்காளிகள், பீகார் மாநிலத்தவர்கள் விரட்டப்பட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தல் பழங்குடி இன மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பிற மாநிலத்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்தும் விதமாக எதிர்காலத்தில் ஜார்கண்ட், ஒடிசா, அசாம் போன்ற அண்டைமாநிலங்களில் நடைபெறும் சட்டபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். என கூறினார்.


Share this page