Select Page

City Union Bank



Share this page

சிட்னி: ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில், நேற்று ஒரே நாளில், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டியதை விட, அதிகமாக மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து, வெள்ளத்தில் சிட்னி தத்தளிக்கிறது.
பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான ஆஸ்திரேலியாவில், மிகப் பெரிய நகரமாக, சிட்னி உள்ளது. இந்த நகரில், நேற்று காலை துவங்கிய கனமழை, இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. கன மழையால், சிட்னி நகர சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சிட்னியில், நவம்பர் மாதத்தில், 84 மி.மீ., மழை பெய்வது வழக்கம், ஆனால், சிட்னியில், நேற்று ஒரே நாளில், 106 மி.மீ., மழை பெய்துள்ளது. சிட்னி நகரில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. விமான நிலையத்தின் ஓடுபாதையில் நீர் சூழ்ந்ததால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள், வேறு நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. ‘அடுத்த இரண்டு நாட்களுக்கு, கன மழை தொடரும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share this page