போபால்: ம.பி.,மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கமாண்டர் இல்லாத ராணுவம் போல் காணப்படுகிறது.என பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
ம.பி., மாநிலத்தில் வரும் 28-ம் தேதிமுதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது. சியோனி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பா.ஜ., தலைவர் அமித்ஷா பேசியதாவது:
ம.பி.,யில் பா.ஜ., கட்சி சிவராஜ்சிங்சவுகான் தலைமையில் தேர்தலை சந்திக்க உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி யார் முதல்வர் என்று அறிவிக்காமல் கமாண்டர் இல்லாத ராணுவம் போல் காணப்படுகிறது.
பிரதமர் மோடி பா.ஜ., தலைவர்களில் ஒருவர் மட்டுமல்ல, ம.பி.,மாநில மக்களுக்கும், 125 கோடி மக்களுக்கும் தலைவர் ஆவார். மேலும் அவர் இந்தியாவின் கவுரவத்தை உலக அளவில் உயர்த்தி உள்ளார் இவ்வாறு அவர் பேசினார்.
