Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: வரும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஏ.டி.எம்களை நி்ர்வகிக்கும் அமைப்பு கூறி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2 லட்சம் ஏ.டி.எம் கள் உள்ளன. இவைகளை தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகிறது. இந்த ஏ.டி.எம்.களின் மூலம் அனைத்து தரப்பினரும் பல்வேறு வங்கி சேவைகளை எளிதில் பெற்று பயன்அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏ.டி.எம் நிர்வகிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: ஏ.டி.எம்களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டு வேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல விதிகள் மாற்ம் செய்யப்பட்டுள்ளன. இதனால், தற்போது செயல்படும் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. இதனை வங்கிகள் ஈடு செய்யாத பட்சத்தில் பெரிய அளவிலான மூடலுக்கு வழி வகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this page