புதுடில்லி: வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுஷ்மா வெளியுறவு துறை அமைச்சராக உள்ளார். சுஷ்மாவுக்கு கடந்த ஆண்டில் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகள் இருந்ததால் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார். இதனால் இவர் உடல் நலம் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.
தேர்தலில் போட்டியிட வேண்டாம் என எடுத்த முடிவை கட்சி மேலிடத்திற்கு சுஷ்மா தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
