சென்னை : ‘கஜா’ புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக, முதல்வர் பழனிசாமி இன்று(நவ.,21) டில்லி பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை, கஜா புயல் ருத்ர தாண்டவம் ஆடியது. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் நிதி கேட்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மாலை டில்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 9.45 மணிக்கு மோடியின் இல்லத்தில் இச்சந்திப்பு நடக்கிறது.
தலைமை செயலகத்தில் அமைச்சர், அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனையில் முதல்வர் ஈடுபட உள்ளார். அப்போது சேத மதிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட உள்ளன.