Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: ராகேஷ் அஸ்தானா மீதான விசாரணையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தலையிட்டார் என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகள் ராகேஷ் அஸ்தனா, அலோக் வர்மா இடையே நடந்த மோதல் காரணமாக இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்ப்டடனர். இதில் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் புகார் குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீதா புகார்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வுருகிறது. இன்று நடந்த விசாரணையில் மற்றொரு சி.பி.ஐ. அதிகாரிகளில் ஒருவரான மணீஷ்குமார் சின்கா மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில் ராகேஷ் அஸ்தனா மீதான ஊழல் வழக்கு விசாரணையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தலையிட்டார், அவரது அலுவலகங்களில் ரெய்டு நடத்துவதற்கும் இடையூறு செய்தார் என பகீர் குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளார்.


Share this page