Select Page

City Union Bank



Share this page

ஸ்ரீநகர்: காஷ்மீரில் , போலீசாரின் தேடுதல் வேட்டையின் போது 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் ஜெய்னாபோரா அருகேயுள்ள ரேபான் பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதிகள் உடல் கைப்பற்றியதுடன், அவர்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Share this page