லண்டன்: ” பாகிஸ்தானுக்கு காஷ்மீரை அளிக்க வேண்டாம். ஏற்கனவே இருக்கும் நான்கு மாகாணங்களை நிர்வாகம் செய்யவே பாகிஸ்தானுக்கு திறமை இல்லை,” என, அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி கூறியுள்ளார்.
மனிதநேயம் தான் முக்கியம்
பாகிஸ்தானில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான அரசு உள்ளது. பாகிஸ்தானில் அதிரடியாக விளையாட கூடிய கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி, லண்டனில், மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:
பாக்.,கிற்கு வேண்டாம்:
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவை இல்லை என்றே நான் கூறுவேன். அதே நேரத்தில், இந்தியாவிடமும் காஷ்மீரை தர வேண்டாம். காஷ்மீர் சுதந்திரமாக இருக்கட்டும். மனித நேயம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். மக்கள் உயிர் இழக்கக் கூடாது.
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. தன்னிடம் இருக்கும் நான்கு மாகாணங்களை நிர்வாகம் செய்யவே பாகிஸ்தானுக்கு திறமை இல்லை. மனிதநேயம் தான் பெரிது. அங்கு (காஷ்மீர்) மக்கள் இறக்கின்றனர். இது வேதனை தருகிறது. இறப்பு என்பது எந்த சமூகமாக இருந்தாலும் வேதனை தருவது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.