ராய்ப்பூர்: ”நாட்டின் வளர்ச்சிக்கு, தான் மட்டுமே காரணம் எனக் கூறுவதன் மூலம், இந்நாட்டு மக்களை, பிரதமர் மோடி அவமதித்துள்ளார்,” என, காங்., தலைவர் ராகுல் பேசினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட ஓட்டுப் பதிவை ஒட்டி, பலோடா பஜாரில், ராகுல் பேசியதாவது:
தான் பிரதமராக பதவியேற்ற பின்பே, நாடு வளர்ச்சிப் பாதையில் செல்வதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். நாட்டின் வளர்ச்சி என்பது, ஒட்டுமொத்த மக்கள் கையில் உள்ளதே தவிர, ஒரு தனி நபரின் கையில் இல்லை. தான் பிரதமரானதற்கு பின்பே, நாடு வளர்ச்சி அடைந்து வருவதாக கூறுவதன் மூலம், பிரதமர் மோடி, நாட்டு மக்களை அவமதித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.