திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மறு சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் இன்று (நவ.13) தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் தலைமையிலான நீதிபதிகள் முன் பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.