Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: ரபேல் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (12ம்தேதி ) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ரபேல் போர் ரக விமானங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பான அணுகுமுறை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று கொண்ட கோர்ட் ரபேல் விவகார விவரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று அபிடவிட் தாக்கல் செய்தது. இந்த அபிடவிட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

 

கடந்த ஆட்சியின் கொள்கை


2013 ம் ஆண்டு வகுத்த கொள்கை முடிவின்படியே 36 ரபேல் போர் ரக விமானங்கள் வாங்கிட முடிவு செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி வகுத்த கொள்கைகளே பின்பற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. அபிடவிட்டில் உள்ள தகவல்கள் வெளிப்படையாக எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share this page