Select Page

City Union Bank



Share this page

வாஷிங்டன் : பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி தடைபட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா பல்கலை.,யில் எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் பேசிய அவர், 2012 முதல் 2016 ம் ஆண்டு வரை இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்தது. அதன் பிறகு பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகிய 2 நடவடிக்கைகளால் வளர்ச்சி தடைப்பட்டது. 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய போதுமானதல்ல. ஆண்டுக்கு 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பதில் திருப்தி அடைந்து விடாமல் அதிக அளவில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது அவசியம்.
அரசியல் கொள்கை முடிவெடுப்பில் அதிகப்படியான அதிகார குவிப்பு இந்தியாவின் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையான பட்டேல் அமைக்கப்பட்டதில் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் பெற வேண்டி இருந்தது இதற்கு ஒரு உதாரணம். பலரும் சுமையை ஏற்று ஒன்றிணைந்து இந்தியா பணியாற்ற வேண்டும். ஆனால் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. யாரும் முடிவெடுக்க விரும்பாமல் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதால், பிரதமர் 18 மணி நேரம் பணியாற்ற வேண்டி உள்ளது என்றார்.


Share this page