Select Page

City Union Bank



Share this page

ராய்பூர் : சத்தீஸ்கரில் 7 இடங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையும் நடந்து வருகிறது.
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலுக்காக 18 தொகுதிகளில் நாளை (நவ.,12) முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தேர்தல் நடைபெறும் 7 பகுதிகளில் மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பிஜப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். அவனிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதன் காரணமாக சத்தீஸ்கரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.


Share this page