Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி: கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். இதில் ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.கர்நாடகாவில் முந்தைய பா.ஜ. ஆட்சியின்போது, சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் ஜனார்த்தன் ரெட்டி 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த போது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபர் ஒருவரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய சம்பவத்தில் ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. . இந்த வழக்கில் தன்னை காத்துக்கொள்ளும் பொருட்டு தற்போது நீதிமன்றத்தில் ஜாமின் பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Share this page