Select Page

City Union Bank



Share this page

புதுடில்லி:”டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதற்காக, ஆயுர்வேத மருந்து தயாரிப்பதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன,” என, ‘ஆயுஷ்’ எனப்படும், ஆயுர்வேதம், யோகா, இயற்கை முறை, சித்தா, ஹோமியோபதி துறை இணைஅமைச்சர், ஸ்ரீபாத நாயக் கூறியுள்ளார்.

டில்லியில் ஆயுர்வேத துறையில் வர்த்தக மேம்பாட்டு குறித்த தேசிய மாநாடு நேற்று நடந்தது. இதில் ஆயுஷ் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஸ்ரீபாத நாயக் கூறியதாவது:டெங்கு நோயை குணப்படுத்துவதற்கு, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதற்கான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்த மருந்துகள் பரீட்சார்த்த முறையில் சோதிக்கப்பட்டு வருகின்றன; இவை, விரைவில் பயன்பாட்டிற்கு வரும்.

பண்டை காலத்தில் எழுதப்பட்ட, மருத்துவ நுால்களான, சரக் சம்ஹிதா, சுஷ்ருத் சம்ஹிதா போன்றவற்றில், பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படும், 20 லட்சம் மருந்துகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.ஆயுர்வேத மருத்துவத்தை விரிவுபடுத்த, ஆயுஷ் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் வர்த்தகம், தற்போது, 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. 2022க்குள், இதை, 70 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கிய, ‘டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா’ போன்ற திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, விரிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Share this page