கோல்கட்டா: சர்தார் வல்லபாய் படேல் நாட்டை ஒற்றுமை படுத்தினாரே தவிர மக்களை பிளவுபடுத்த விரும்பவில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
குஜராத்தில் நேற்று சுதந்திர போராட்ட தியாகியும் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படலேின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசுகையில்”நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடித்து, தைரியத்தின் சின்னமாகவும், ஒற்றுமையின் சின்னமாகவும், சர்தார் படேல் விளங்குகிறார் என்றார்.
இது குறித்து மேற்குவங்க திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது, நாட்டை ஒற்றுமைபடுத்தவே பட்டேல் முயற்சித்தாரே தவிர மக்களை ஜாதி, மத ரீதியாக அவர் பிரித்து பார்க்கவில்லை. மக்களை பிளவுபடுத்த விரும்பவும் இல்லை. ஆனால் அசாம் மாநிலத்தில் மக்களை பிளவுபடுத்தவே தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற செயல்களில் பா.ஜ. ஈடுபட்டு வருகிறது என்றார்.